Kaviya Mullai Pol - தமிழ் பாடல் வரிகள்
காவிய முல்லை போல் ஒரு பிள்ளை
ஆ…..ஆ…….ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…ஆஅ…..
ஆண் :
காவிய முல்லை போல் ஒரு பிள்ளை
தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே
பிள்ளை நிலா எங்கே போனாளோ
வண்டு விழும் மாலை ஆனாளோ…
ஆண் :
பிஞ்சு நடைப்போட்டு பிள்ளை குலம் போகும்
உள்ளிருக்கும் சோகம் கண்ணில் எட்டி பார்க்கும்
நெஞ்சில் பிள்ளை கையில் இல்லை
நெஞ்சில் பிள்ளை கையில் இல்லை
ஆண் :
காவிய முல்லை போல் ஒரு பிள்ளை
தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே
தவறியது எங்கே…….
ஆண் :
இது என்ன மேடை மரணத்தின் வாடை
இவன் தேகம் நாளை கிழிகின்ற ஓலை
சோக மேகம் வானில் போகும்
பாதையாவும் பாலையாகும்
ஆண் :
காவிய முல்லை போல் ஒரு பிள்ளை
தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே
தவறியது எங்கே…….
ஆண் :
இமைகளின் ஈரம் சுடுகின்ற பாரம்
இனி எந்த நாளும் இலையுதிர் காலம்
சாவின் ஓசை கேட்கும் போது
மீண்டும் பிள்ளை காண்பதேது…..
ஆண் :
காவிய முல்லை போல் ஒரு பிள்ளை
தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே
பிள்ளை நிலா எங்கே போனாளோ
வண்டு விழும் மாலை ஆனாளோ…
Kaviya Mullai Pol - English Lyrics
Male :
Kaaviya mullai pol oru pillai
Aa….aa….aa….aa….aa….aa…..aa….aaa…..
Male
: Kaaviya mullai pol oru pillai
Thavazhnthathu ingae thavariyathu engae
Pillai nilaa engae ponaalo
Vandu vizhum maalai aanaalo
Male :
Pinchu nadaipottu pillai kulam pogum
Ullirukkum sogam kannil etti paarkkum
Nenjil pillai kayil illai
Nenjil pillai kayil illai
Male :
Kaaviya mullai pol oru pillai
Thavazhnthathu ingae thavariyathu engae
Thavariyathu engae….
Male :
Idhu enna medai maranaththin vaadai
Ivan thegam naalai kizhigindra olai
Soga megam vaanil pogum
Paadhaiyaavum paalaiyaagum
Male :
Kaaviya mullai pol oru pillai
Thavazhnthathu ingae thavariyathu engae
Thavariyathu engae….
Male :
Imaigalin eeram sudugindra paaram
Ini entha naalum ilaiyuthir kaalam
Saavin osai ketkkumpothu
Meendum pillai kaanpathethu
Male :
Kaaviya mullai pol oru pillai
Thavazhnthathu ingae thavariyathu engae
Pillai nilaa engae ponaalo
Vandu vizhum maalai aanaalo…..