Nanthanin Sarithiram - தமிழ் பாடல் வரிகள்
ஆண்டவன் படைப்பிலே
ஆதியிலே ஜாதிமத பேதமில்லை
அவையெல்லாம் பாதியிலே
மனிதர்களால் உலகிலே வந்த தொல்லை……
ஆண் :
நந்தனின் சரித்திரம் அருமை
நானுரைப்பேன் அதன் பெருமை
நானுரைப்பேன் அதன் பெருமை
நந்தனின் சரித்திரம் அருமை
நானுரைப்பேன் அதன் பெருமை…
நானுரைப்பேன் அதன் பெருமை
ஆண் :
ஆதனூரிலே சேரி தன்னிலே
ஆதனூரிலே சேரி தன்னிலே
அடிமை நந்தனும் பிறந்தானே….
ஆனிப் பொன்னணி அம்பலவாணன்
அருளை நினைத்தே வளர்ந்தானே..
நந்தனின் சரித்திரம் அருமை
நானுரைப்பேன் அதன் பெருமை…
நானுரைப்பேன் அதன் பெருமை
ஆண் :
அந்தணராகிய ஆண்டையினிடமே
அம்பலம் செல்லவே விடை கேட்டான்
அந்தணராகிய ஆண்டையினிடமே
அம்பலம் செல்லவே விடை கேட்டான்
பண்ணை வேலைகள் பாங்குடன் முடித்தே
பறையா நீ போய் வா என்றார்….
ஆண் :
கண்ணீர் பெருக்கி நந்தன் கலங்கவே
கண் மூன்றுடையோனின் கருணையால் அன்றிரவே
கழனியெல்லாம் நீர் பாய்ந்து பயிரேறி
கதிர் விளைந்தே தலை சாய்ந்தே நின்றதுவே
ஆண் :
பக்தியின் மகிமையை வேதியர் உணர்ந்தே
பரிவுடன் போய் வர விடை அளித்தார்
ஊணும் உறக்கமும் மறந்தே நந்தனும்
உள்ளம் உருகி நின்றிடவே
ஆண் :
உமையவள் நாதன் அருளதினாலே
உள்ளம் மாறிய மறையவரே
தியானத்தில் மூழ்கிய நந்தனை அழைத்தே
சிவனைச் சேவிக்க செய்தனரே
ஆனந்தக் கண்ணீர் பெருக்கிய அன்பன்
அருட் சோதியிலே கலந்தானே……
Nanthanin Sarithiram - English Lyrics
Music Director :
Pendyala Nageswara Rao
Lyricist :
A. Maruthakasi
Male :
Aandavan apdaippilae
Aadhiyilae jaathi madha baedhamillai
Avaiellaam paadhiyilae
Manidhargalaal ulagilae vandha thollai
Male :
Nandhanin sarithiram arumai
Naan uraippen adhan perumai
Naan uraippen adhan perumai
Nandhanin sarithiram arumai
Naan uraippen adhan perumai
Naan uraippen adhan perumai
Male :
Aadhanoorilae saeri thannile
Aadhanoorilae saeri thannile
Adimai nanhanum pirandhaanae
Aani ponnani ambalavaanan
Arulai ninaithae valarndhaane
Nandhanin sarithiram arumai
Naan uraippen adhan perumai
Naan uraippen adhan perumai
Male :
Andhanaraagiya aandaiyinidamae
Ambalam sellavae vidai kettaan
Andhanaraagiya aandaiyinidamae
Ambalam sellavae vidai kettaan
Pannai velaigal paangudan mudithe
Paraiya nee poyi va endraar
Male :
Kannaeer peruki anndhan kalangavae
Kann moondrudaiyonin karunaiyaal andriravae
Kazhani ellaam neer paaindhu payir yeri
Kadhir vilaindhae thalai saaindhae nindrathuvae
Male :
Bakthiyin magimaiyai vedhiyar unardhae
Parivudan poyi vara vidai alithaar
Oonum urakkamum marndhae nandhanum
Ulalm urughi nindridavae
Male :
Umaiyaval naadhan aruladhinaale
Ullam maariya maraiyavarae
Thiyanathil moozhgiya nandhanai azhaithae
Siavnai sevikka seidhanare
Aanandha kanneer perukkiya anban
Arutjodhyilae kalandhaanae