Un Uthadu Ennum - தமிழ் பாடல் வரிகள்
உன் உதடு என்னும்
பெண் :
ஒஹ் ஹோஹோ அஹ்ஹஆஹா
ஒஹ் ஹோஹோ அஹ்ஹஆஹா
ஆண் :
கதவு கொஞ்சம்
பெண் :
ஒஹ் ஹோஹோ அஹ்ஹஆஹா..
ஆண் :
உன் உதடு என்னும் கதவு கொஞ்சம்
திறக்க வேண்டுமே
அதன் உள்ளிருக்கும் கள் எடுத்து
குடிக்க வேண்டுமே நான் குடிக்க வேண்டுமே
பெண் :
உன் உறவுக் கொள்ள இரவு மெல்ல
மலர வேண்டுமே
ஆண் :
ஒஹ் ஹோ
பெண் :
அந்த நள்ளிரவில் கள் எடுத்து பருக வேண்டுமே
நீ பருக வேண்டுமே
ஆண் :
நேற்றிரவு என்னை கொஞ்சம்
வாட்டியது உந்தன் எண்ணம்
நேற்றிரவு என்னை கொஞ்சம்
வாட்டியது உந்தன் எண்ணம்
பெண் :
காற்றில் ஒரு தீபம் போலே
ஆடியது ஆசை நெஞ்சம்
காற்றில் ஒரு தீபம் போலே
ஆடியது ஆசை நெஞ்சம்
ஆண் :
அழகே……அருகே……வரலாமா…..
இளந்தளிர் இடையினில் அடியேன் கைகள் படலாமா
பெண் :
இளமையின் கனவினில் தனியே என்னை விடலாமா
குளிரோடு உலவிடும் தென்றல் தீயாய் சுடலாமா
ஆண் :
உன் உதடு என்னும் கதவு கொஞ்சம்
திறக்க வேண்டுமே
அதன் உள்ளிருக்கும் கள் எடுத்து
குடிக்க வேண்டுமே நான் குடிக்க வேண்டுமே
இருவர் :
……………………….
பெண் :
மேனி ஒரு வீணை என்று
மீட்டியது மன்னன் கைகள்
மேனி ஒரு வீணை என்று
மீட்டியது மன்னன் கைகள்
ஆண் :
பார்வை ஒரு ராகம் என்று
பாடியது நீலக் கண்கள்
பார்வை ஒரு ராகம் என்று
பாடியது நீலக் கண்கள்
பெண் :
மடி….மேல்…கொடி போல் விளையாட
மழை தரும் முகிலென மெதுவாய் அசைந்தே குழலாட
ஆண் :
கடல் வரும் நதியென கனியே எனை நீ கலந்தாட
இள மனம் துடிக்குது கொஞ்சும் தமிழால் கவி பாட
பெண் :
உன் உறவுக் கொள்ள இரவு மெல்ல
மலர வேண்டுமே
அந்த நள்ளிரவில் கள் எடுத்து பருக வேண்டுமே
நீ பருக வேண்டுமே
Un Uthadu Ennum - English Lyrics
Male :
Un udhadu ennum
Female :
Oh hoho ahhaaahaa
Oh hoho ahhaaahaa
Male :
Kadhavu konjam
Female :
Oh hoho ahhaaahaa
Male :
Un udhadu ennum kadhavu konjam
Thirakka vendumae
Adhan ullirukkum kal eduththu
Kudikka vendumae naan kudikka vendumae
Female :
Un uravukolla iravu mella
Malara vendumae
Male :
Ohho
Female :
Antha nalliravila kal eduththu paruga vendumae
Nee paruga vendumae
Male :
Nettriravu ennai konjam
Vaattiyathu unthan ennam
Nettriravu ennai konjam
Vaattiyathu unthan ennam
Female :
Kaattril oru dheepam polae
Aadiyathu aasai nenjam
Kaattril oru dheepam polae
Aadiyathu aasai nenjam
Male :
Azhagae….arugae….varalaamaa…..
Ilanthalir idaiyinil adiyaen kaigal padalaamaa
Female :
Ilamaiyin kanavinil thaniyae ennai vidalaamaa
Kulirodu ulavidum thendral theeyaai sudalaamaa
Male :
Un udhadu ennum kadhavu konjam
Thirakka vendumae
Adhan ullirukkum kal eduththu
Kudikka vendumae naan kudikka vendumae
Both :
………….
Female :
Maeni oru veenai endru
Meettiyathu mannan kaigal
Maeni oru veenai endru
Meettiyathu mannan kaigal
Male :
Paarvai oru raagam endru
Paadiyathu neela kangal
Paarvai oru raagam endru
Paadiyathu neela kangal
Female :
Madi….mael…..kodi pol vilaiyaada
Mazhai tharum mugilena medhuvaai asainthae kuzhalaada
Male :
Kadal varum nathiyena kaniyae enai nee kalanthaada
Ila manam thudikkuthu konjum thamizhaal kavi paada
Female :
Un uravukolla iravu mella
Malara vendumae
Antha nalliravila kal eduththu paruga vendumae
Nee paruga vendumae