Tamil Lyrics

Brahman Thalam Poda song lyrics

Movie — Konjum Salangai

Singer(s) — Rajalakshmi, Jayalakshmi

Lyricist — Ku. Ma. Balasubramaniam

Music Director — S. M. Subbaiah Naidu

Brahman Thalam Poda - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பிரம்மன் தாளம் போட மால் படகந்தனை முழக்க
பேராம் வாணி அருமையாம் வீணை கொள
சீர்ங்குழலி ரவி சசியும் அடைவாயூத
கிருபையுடன் தேவர் ஒலி செய்ய
நந்தி மத்தளம் சங்கீதத்தைத்
தும் புரு முழங்க ரசம் பிறக்க
சிவநாடும் நடனத்தைப் போற்றுவேனே…….ஏ….ஏ….
ஆஅ…..ஆ……ஆ……ஆ….

பெண் :
அபிநயங்கள் காட்டியே
நீ ஆடலாமோ போட்டியே
சபையில் பாவராக தாளம்
லாஸ்யமோடும் தாண்டவம்
இவை கலந்து நடனமாடத் தெரியுமா
நீ இலாவகமாய் நடைகள் போட முடியுமா

பெண் :
தகதிமி என்னும் நான்கு அட்சரம்
தாளமிதன் பேர் சதுஸ்ரம்
தகுந்த லயமொடு ஆடுவதற்கு
நிதானமும் ஞானமும் அவசியம்

பெண் :
ஐந்து நடைகளில் ஆதி தாளமாய்
அமைந்தது சதுஸ்ரம் தானம்மா
அடுத்த நடைகளை வரிசை முறையிலே
ஆட உனக்குத் தெரியுமா

பெண் :
தகிட மூன்று அட்சரம்
இது தாளவாத்ய சாஸ்திரம்
தகுதியோடு தேர்ந்தவர்கள்
தந்த பெயர் திஸ்ரம்

பெண் :
தகிட தகதிமி பழகு நடையினில்
தவழ வருவது ஏழு அட்சரம்
மகிழும் மனதொடு மதுர ஒலியொடு
சகல கலைஞரும் புகழும் மிஸ்ரம்

பெண் :
தகிதகிட எனும் ஒலியில்
தனியழகு கண்டோம்
சுகமுடைய நடையின் பெயர்
சொல்லுவது கண்டம்

பெண் :
……………………

பெண் :
தகிதகிட எனும் ஒலியில்
தனியழகு கண்டோம்

பெண் :
தகதிமி தகதகிட ஒலியொடு நடனமிடும்
தனியொரு நடையின் பெயர்
அழகிய சங்கீர்ணமே

பெண் :
முகமொடு விழகரமும்
நவரச நயம் மிளிர
முறையொடு நடனமிடத்
திறம் மிக வேணுமே

பெண் :
ஆயிரம் நாட்டியம் ஆடிய போதிலும்
ஓவிய நாட்டியம் தெரியுமா…..ஆஅ……

பெண் :
சித்திர நந்தனம் எத்தனை வேண்டும்
சிம்ம நந்தனம் ஆடட்டுமா

பெண் :
சிம்ம நந்தனம் ஆடிடு முன்னே
மயூர பந்தனம் செய்யட்டுமா…..ஆ…..
மயூர பந்தனம் செய்யட்டுமா…..ஆ…..

பெண் :
இருட்டிலும் தணல் போலே
இருவிழி ஜொலிக்கும்
இடி இடித்தாற் போலே
கர்ஜனை முழங்கும்….

பெண் :
அழகிய கழுத்தினை
லயமுடன் ஆட்டும்
ஆயிரம் விழிகளைத்
தோகையில் காட்டும்…..

பெண் :
குறுகிய கொடி இடை
மங்கையைப் பழிக்கும்
கோபத்தின் கொதிப்பாலே
பிடரியைச் சிலிர்க்கும்

பெண் :
செழும் பசும்பொன் போலே
மின்னிடும் தோற்றம்
சிங்காரமாகவே நடையெழில் காட்டும்

பெண் :
சிம்மத்தைக் கண்டாலே
யானைக்கு திண்டாட்டம்
சிம்மத்தைக் கண்டாலே
யானைக்கு திண்டாட்டம்

பெண் :
மழை முகில் கண்டாலே
மயிலுக்கு கொண்டாட்டம்….
மழை முகில் கண்டாலே
மயிலுக்கு கொண்டாட்டம்….

ஆண் :
………………………….

Brahman Thalam Poda - English Lyrics

Female :

Biramman thaalam poda

Maal padakanthanai muzhakka

Poraam vaani arumaiyaam veenai kola

Seernguzhali ravi sasiyum adaivaayoodha

Kirubaiyudan devar oli seiya

Nandhi maththalam sangeethaththai

Dhum puru muzhanga rasam pirakka

Sivan aadum nadanaththai pottruvaenae…ae…ae…

Aaa….aa…..aa….aa….

Female :

Abhnayangal kaattiyae

Nee aadalaam pottiyae

Sabaiyil paavaraaga thaalam

Laasyamodum thaandavam

Ivai kalanthu nadanamaada theriyumaa

Nee laavagamaai nadaigal poda mudiyumaa

Female :

Thagathimi ennum naangu atcharam

Thaalamithin per sathusram

Thaguntha layamodu aaduvatharkku

Nithaanamum nyanamum avasiyam

Female :

Ainthu nadaigalil aadhi thaalamaai

Amainththau sadhusram thaanammaa

Aduththa nadaigalai varisai muraiyil

Aada unakku theriyumaa

Female :

Thagida moondru atcharam

Idhu thaalavaathya saasthiram

Thaguthiyodu thernthavargal

Thantha peyar thisram

Female :

Thagida thagathimi pazhagu nadayinil

Thavazha varuvathu yaezhu atcharam

Magizhum manathodu mathura oliyodu

Sagala kalaingarum pugazhum misram

Female :

Thagithgida enum oliyil

Thaniyazhagu kandom

Sugamudaiya nadaiyin peyar

Solluvathu kandam

Female :

…………………….

Female :

Thagithgida enum oliyil

Thaniyazhagu kandom

Female :

Thagathimi thagathagida

Oliyodu nadanamidum

Thani oru nadayin peyar

Azhagiya sangeernamae

Female :

Mugamodu vizhagaramum

Navarasa nayam milira

Muraiyodu nadanamida

Thiram miga venumae

Female :

Aayiram naattiyam aadiya pothilum

Ooviya naattiyam theriyumaa…..aaa….

Female :

Chiththira nanthanam

Eththanai vendum

Simma nanthanam aadattumaa

Female :

Simma nanthanam aadidum munnae

Muyoora panthanam seiyattumaa….aa…

Muyoora panthanam seiyattumaa….aa…

Female :

Iruttilum thanal polae

Iruvizhai jolikkum

Idi idiththaar polae

Karjanai muzhangum

Female :

Azhagiya kazhuththinai

Layamudan aattum

Aayiram vizhigalai

Thogaiyil kaattum….

Female :

Kurugiya kodi idai

Mangayai pazhaikkum

Kobaththin kothippaalae

Pidariyai silirkkum

Female :

Sezhum pasumpon polae

Minnidum thottram

Singaaramaagavae nadai ezhil kaattum

Female :

Singaththai kandaalae

Yaanaikku thidaattam

Singaththai kandaalae

Yaanaikku thidaattam

Female :

Mazhai mugil kandaalae

Mayilukku kondaattam

Mazhai mugil kandaalae

Mayilukku kondaattam

Male :

………………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Brahman Thalam Poda

Which movie does the song Brahman Thalam Poda belong to?

The song Brahman Thalam Poda is from the movie Konjum Salangai.

Who is the music director of Brahman Thalam Poda?

The music for Brahman Thalam Poda is composed by S. M. Subbaiah Naidu.

Who wrote the lyrics for Brahman Thalam Poda?

The lyrics for Brahman Thalam Poda are penned by Ku. Ma. Balasubramaniam.

Who sang the Brahman Thalam Poda song?

Brahman Thalam Poda is sung by Rajalakshmi, Jayalakshmi.

Related Songs