Kalaiyin Perumai Solla - தமிழ் பாடல் வரிகள்
கலையின் பெருமை சொல்லப் போகுமோ
சொல்லப் போகுமோ…
அந்தக் கம்பனாலும் எந்தக் கொம்பனாலும்
கற்பனைக்கிருப்பிடமாய் நற்பயன் விளைக்கும் தூய
கலையின் பெருமை சொல்லப் போகுமோ
சொல்லப் போகுமோ…
ஆண் :
சிலையை வணங்கும் தெய்வம் ஆக்குமேயடா
வெறும் சிலை அதைச் செய்தவனை
தேவருடன் சேர்க்குமேயடா
உலகத்தையே உருண்டையாக்குமேயடா
இந்த முழு உண்மையுடன் பொய்யை ஒன்றாய் சேர்க்குமேயடா
ஆண் :
சீர் மிகும் கலை யாரிடம் மிகச் சிறந்து
விளங்குவது தெரியுமா
ஆண் :
தெரியாதுங்களே
ஆண் :
அழகுத் தெய்வம் நடமாடும் கலைக்கோயில்
பழகு முன்னே என்னைப் பைத்தியமாக்கிய
அந்தப் பாவை மேகலா தேவியின் தேன் மொழியிலே…..
வேல்விழியிலே அவள் நடையிலே மின் இடையிலே
கை வீச்சிலே பெருமூச்சிலே
அவள் அங்க அசைவிலெல்லாம் கலாரசம்
பொங்கி வழியுதடா……
ஆண் :
அவள் கலாதேவி நான் கலா தேவன்
நான் கலைஞன் அவள் கலைஞி
எந்தக் காலத்திலும் எமைப் போலொரு
ஜோடியைக் கண்டதுண்டோ உலகினிலே
ஹா……..ஹா…….ஹா……ஹா…….
Kalaiyin Perumai Solla - English Lyrics
Male :
Kalaiyin perumai solla pogumoo
Solla pogumoo
Andha kambanaalum endha kombanaalum
Karppanaikiruppidamaai narppayan vilaikkum thooya
Kalaiyin perumai solla pogumoo
Solla pogumoo
Male :
Silaiyai vanangum deivam aakumaeyada
Verum silai adhai seidhavanai
Devarudan saerkkumaeyadaa
Ulagathaiyae urundaiyaakkumaeyadaa
Indha muzhu unmaiyudan poiyai ondraai saerkkumaeyadaa
Male :
Seermigum kalai yaaridam migha sirandhu
Vilanguvadhu theriyuma
Male :
Theriyudhungalae
Male :
Azhagu deivam nadamaadum kalaikoyil
Pazhagu munnae ennai paithiyamaakkiya
Andha paavai meghala deviyin thaen mozhiyilae
Vel vizhiyilae aval nadaiyilae min idaiyilae
Kai vechilae peru moochilae
Aval anga asaivil ellaam kalarasam
Ponghi vazhiyudhadaa
Male :
Aval kalaa devi naan kalaa devan
Naan kalaingan aval kalaingi
Endha kaalathilum emai pol oru
Jodiyai kandathundoo ulaginilae
Haa….haaa…haaa…haa…