Purappaduvome Anne - தமிழ் பாடல் வரிகள்
புறப்படுவோமே அண்ணே புறப்படுவோமே
கட்டுவலை எடுத்துக் கொண்டு புறப்படுவோமே
பெருங்கடல் கடந்து மீன் பிடிக்க புறப்படுவோமே
புறப்படுவோமே அண்ணே புறப்படுவோமே…..
ஆண் :
கடல் கடந்து செல்வதற்கு தோணியுமுண்டு
கட்டை சுறா உளுவை மீன்கள் கடலிலே உண்டு
கடவுள் தந்த கைகளிலே முழு பலமுண்டு
குழு :
அண்ணே முழு பலமுண்டு……
ஆண் :
கட்டு மரம் ஏறிச் செல்வோமே
பெருங்கடல் கடந்து மீன் பிடிப்போமே
வீண் கவலையற்று வாழ்ந்திடுவோமே
குழு :
புறப்படுவோமே அண்ணே புறப்படுவோமே…..
ஆண் :
கை மடக்கி சேவகம்தான்
செய்யவும் வேண்டாம்
எஜமான் கட்டளைக்குக்
காத்துக்கிட்டு நிற்கவும் வேண்டாம்
பையப்பையப் பேசிப் பணம்
வாங்கவும் வேண்டாம்
சிரமம் பட்டதற்குப் பலனில்லாமல்
ஏங்கவும் வேண்டாம்…
ஆண் :
கட்டு மரம் ஏறிச் செல்வோமே
பெருங்கடல் கடந்து மீன் பிடிப்போமே
வீண் கவலையற்று வாழ்ந்திடுவோமே
குழு :
புறப்படுவோமே அண்ணே புறப்படுவோமே…..
ஆண் :
முப்பது நாள் உழைத்து உழைத்துக்
குறைப் பணம் வாங்கி
அதை மூன்று நாளில் தீர்த்து விட்டுக்
கடனையும் வாங்கி பாக்கி நாளில்
பெரும் பகுதி பட்டினியாகி
மனப் பதறலோடு மாரடிக்கும் ஜென்மமும் வேண்டாம்
ஆண் :
கட்டு மரம் ஏறிச் செல்வோமே
பெருங்கடல் கடந்து மீன் பிடிப்போமே
வீண் கவலையற்று வாழ்ந்திடுவோமே
குழு :
புறப்படுவோமே அண்ணே புறப்படுவோமே…..
Purappaduvome Anne - English Lyrics
Chorus :
Purapaduvomae annae purapaduvomae
Katuvalai eduthu kondu purapaduvomae
Perungadal kadanthu meen pidikka purapaduvomae
Purapaduvomae annae purapaduvomae
Male :
Kadal kadanthu selvadharkku thoniyum undu
Kattai pura uluvai meengal kadalilae undu
Kadavul thandha kaigalilae mulu balamum undu
Chorus : Annae muzhu balamundu
Male :
Kattu maram yaeri selvomae
Perungadal kadanthu meen pidippomae
Veen kavalaiyuttru vaazhndhiduvomae
Chorus :
Purapaduvomae annae purapaduvomae
Male :
Kai madakki saevagam thaan
Seiyavum vendaam
Ejamaan kattalaikku
Kaathukittu nirkkavum vendaam
Paiyapaiya paesi panam
Vaangavum vendaam
Siramam pattadharkku palan illamal
Yengavum vendaam
Male :
Kattu maram yaeri selvomae
Perungadal kadanthu meen pidippomae
Veen kavalaiyuttru vaazhndhiduvomae
Chorus :
Purapaduvomae annae purapaduvomae
Male :
Muppadhu naal uzhaithu uzhaithu
Kurai panam vaangi
Adhai moondru naalil theerthu vittu
Kadanaiyum vaangi baakki naalil
Perum pagudhi pattiniyaaghi
Mana padharalodu maar adikkum
Jenmamum vendaam
Male :
Kattu maram yaeri selvomae
Perungadal kadanthu meen pidippomae
Veen kavalaiyuttru vaazhndhiduvomae
Chorus :
Purapaduvomae annae purapaduvomae