Tamil Lyrics

Koothadum Kondaiyile song lyrics

Movie — Iravum Pagalum

Singer(s) — Sirkazhi Govindarajan, P. Susheela

Lyricist — Aalangudi Somu

Music Director — T. R. Pappa

Koothadum Kondaiyile - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லிகைப் பூ
கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லிகைப் பூ
கேக்காத கேள்வியெல்லாம் கேக்குதடி உன்னழகு
கேக்காத கேள்வியெல்லாம் கேக்குதடி உன்னழகு

பெண் :
நட்ட நடு வீதியிலே நாலு பேரு மத்தியிலே
நட்ட நடு வீதியிலே நாலு பேரு மத்தியிலே
வெக்கமா இருக்குதுங்க பேசாம விட்டுருங்க
வெக்கமா இருக்குதுங்க பேசாம விட்டுருங்க

ஆண் :
{தாவணி போட்ட ……..
தவிக்குதடி என் மனசு
காவல் இருப்பதை பார்க்கலியே
காரணம் சொன்னாலும் கேட்கலையே } (2)

பெண் :
ஆத்தாடி இதுக்குள்ளே அவசரமும் கூடாது
ஆத்தாடி இதுக்குள்ளே அவசரமும் கூடாது
அத்தை மகளானாலும் கட்டுக் காவல் போகாது
அத்தை மகளானாலும் கட்டுக் காவல் போகாது

ஆண் :
கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லிகைப் பூ
கேக்காத கேள்வியெல்லாம் கேக்குதடி உன்னழகு

ஆண் :
வெட்கத்துக்கு வேலையில்லே வெலகிப் போற வயசுமில்லே
வெட்கத்துக்கு வேலையில்லே வெலகிப் போற வயசுமில்லே
சொக்குப் போடி போட்டவளே சுகத்தை
மறுத்தல் நியாயமில்லே நியாயமில்லே

பெண் :
ஆசைக்கு வேலி போட்டுக்கணும்
அறிவைக் கொஞ்சம் தீட்டிக்கணும்
ஆசைக்கு வேலி போட்டுக்கணும்
அறிவைக் கொஞ்சம் தீட்டிக்கணும்
மீசை மொளைச்ச அழகு மச்சான்
மனசை ரொம்ப தேத்திக்கணும் தேத்திக்கணும்

ஆண் :
கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லிகைப் பூ
கேக்காத கேள்வியெல்லாம் கேக்குதடி உன்னழகு

பெண் :
நட்ட நடு வீதியிலே நாலு பேரு மத்தியிலே
வெக்கமா இருக்குதுங்க பேசாம விட்டுருங்க
வெக்கமா இருக்குதுங்க பேசாம விட்டுருங்க

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Koothadum Kondaiyile

Which movie does the song Koothadum Kondaiyile belong to?

The song Koothadum Kondaiyile is from the movie Iravum Pagalum.

Who is the music director of Koothadum Kondaiyile?

The music for Koothadum Kondaiyile is composed by T. R. Pappa.

Who wrote the lyrics for Koothadum Kondaiyile?

The lyrics for Koothadum Kondaiyile are penned by Aalangudi Somu.

Who sang the Koothadum Kondaiyile song?

Koothadum Kondaiyile is sung by Sirkazhi Govindarajan, P. Susheela.

Related Songs