Namo Narasimha Naadha - தமிழ் பாடல் வரிகள்
ஏ மாதவா முகுந்தா
பாபசம்ஹாரா
திரிலோக ஜகன்மோகனா காரா
மாயவதாரா ஜகன்நாதா
லோகாதிநாதா
பெண் :
மச்சாவதாரத்திலே சோமனைக் கொன்று
வேதங்கள் காத்தனை!
தேவாசுரர் அன்று பாற் கடல் கடைகின்ற காலத்தில்
கூர்மாவதாரம் கொண்டு மந்திரமலை தாங்கி
ஜகன்மோகினியாக உருமாறி
வானமுதை தேவர்க்கு ஊட்டினை!
வராக ரூபம் கொண்டே சிறைப்பட்ட
பூதேவியை மீட்டனை!
பெண் :
அண்டத்தில் அண்டமொடு அணுவுக்குள் அணுவான ஜகதீசனே!
இன்று உன் மகிமை அறியாத அஞ்ஞானிக் கண் தந்து
மெய்யான அமுதூட்டி அடியாரின் குறை தீர்க்க
நரசிங்க அவதாரமாய்
இங்கே அமைய ஆட் கொள்ளவே நீ வந்தாயோ தேவா!
பரந்தாமா ! வைகுண்ட வாசா! வைகுண்ட வாசா!
பெண் :
நமோ நரசிம்மா நமோ பக்தபாலா
அனைவரும் :
நமோ நரசிம்மா நமோ பக்தபாலா
பெண் :
விண்ணும் மண்ணுமே வியந்து அஞ்சிடும்
உக்கிர ரூபமே உடனே மாற்றுவாய்!
அனைவரும் :
விண்ணும் மண்ணுமே வியந்து அஞ்சிடும்
உக்கிர ரூபமே உடனே மாற்றுவாய்!
பெண் :
கருணையான அருள் மழை பொழிந்திடும்
வடிவமாக நீ வந்தே தோன்றுவாய்!
அனைவரும் :
நமோ நரசிம்மா நமோ பக்தபாலா
நமோ நரசிம்மா நமோ பக்தபாலா
நமோ நரசிம்மா நமோ பக்தபாலா